உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் — நீந்தல மன்னோஎன் கண். | குறள் எண் - 1170

Thirukkural Verse 1170

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.

கலைஞர் உரை

காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது

மு. வரதராசன் உரை

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை

என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனம்போலக் காதலருள்ள இடத்திற்குக் கடிதிற் செல்ல வல்லவையானால் என் கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய நீரை நீந்தாதிருக்கும்.

Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer

Neendhala Mannoen Kan

Couplet

When eye of mine would as my soul go forth to him,It knows not how through floods of its own tears to swim

Translation

Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!

Explanation

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears

Comments (1)

Jayesh Sura
Jayesh Sura
jayesh sura verified

2 months ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

Marandhum Piranketu Soozharka Soozhin

Aranjoozham Soozhndhavan Ketu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.