இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். | குறள் எண் - 1315

immaip-pirappil-piriyalam-endrenaak-kannirai-neerkon-tanal-1315

72

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

"``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி"

கலைஞர் உரை

"இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்."

மு. வரதராசன் உரை

"காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதல் மிகுதியால் இப்பிறப்பில் பிரியேன் என்று கூறினேன். அதனால் மறுபிறப்பில் பிரிவேன் என்று குறித்ததாகக் கருதி, தன்னுடைய கண்களில் நிறைந்த நீரினைக் கொண்டாள். "

வி முனுசாமி உரை

Immaip Pirappil Piriyalam Endrenaak
Kannirai Neerkon Tanal

Couplet

'While here I live, I leave you not,' I said to calm her fearsShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears

Translation

\"In this life we won't part\" I told Her eyes at once with tears were filled

Explanation

When I said I would never part from her in this life her eyes were filled with tears

72

Write Your Comment