அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். | குறள் எண் - 1303

alandhaarai-allalnoi-seydhatraal-thammaip-pulandhaaraip-pullaa-vital-1303

74

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

"ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்"

கலைஞர் உரை

"தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது."

மு. வரதராசன் உரை

"தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம். "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தம்மைப் பெறாமல் புலந்து கொண்டிருக்கும் மகளிரை, அப்புலவி நீக்கி ஆடவர் கலவாதிருத்தல் முன்னமேயே துன்புற்று அலந்தாரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கினது போன்றதாகும். "

வி முனுசாமி உரை

Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip
Pulandhaaraip Pullaa Vital

Couplet

'Tis heaping griefs on those whose hearts are grieved;To leave the grieving one without a fond embrace

Translation

To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved

Explanation

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony

74

Write Your Comment