காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. | குறள் எண் - 1286

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
"அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை"
"காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை."
"கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்."
"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.). "
"மணக்குடவர் உரை: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன். "
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலரைக் காணுகின்றபோது அவரது தவறுகளைக் காண முடியாதவளாகின்றேன். அவரைக் காணாத போது தவறுகள் அல்லாமல் பிறவற்றைக் காண்கின்றிலேன். "
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal
Kaanen Thavaral Lavai
Couplet
When him I see, to all his faults I 'm blind;But when I see him not, nothing but faults I find
Translation
When he's with me I see not fault And nought but fault when he is not
Explanation
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults
Write Your Comment