வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு — வீழ்வார் அள க்கும் அளி. | குறள் எண் - 1192

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி.
கலைஞர் உரை
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்
மு. வரதராசன் உரை
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிரிந்திருக்கும் கணவர் காலமறிந்து வந்துகாட்டும் பேரன்பு மகளிர்க்கு, தன்னையே நம்பி உயிர்வாழுகின்ற மக்களுக்குக் காலமறிந்து மலை அளவுடன் பெய்தது போன்றதாகும்.
Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku
Veezhvaar Ala� Kkum Ali
Couplet
As heaven on living men showers blessings from above,Is tender grace by lovers shown to those they love
Translation
The lover-and-beloved's self-givings Are like rains to living beings
Explanation
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it
Comments (3)

Darshit Agrawal
1 month ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Eshani Kuruvilla
1 month ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Chirag Bassi
1 month ago
Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.