வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து — வாழ்வாரின் வன்கணார் இல். | குறள் எண் - 1198

Thirukkural Verse 1198

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

கலைஞர் உரை

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது

மு. வரதராசன் உரை

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தம்மால் காதலிக்கப்படும் தலைவரிடமிருந்து ஓர் இனியசொல்லையும் பெறாமல் இருந்து பிரிவினையைப் பொறுத்துக்கொண்டு வாழ்கின்ற பெண்கள் போல வன்கண்மையுடையார் இவ்வுலகில் இல்லை.

Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu

Vaazhvaarin Vankanaar Il

Couplet

Who hear from lover's lips no pleasant word from day to day,Yet in the world live out their life,- no braver souls than they

Translation

None is so firm as she who loves Without kind words from whom she dotes

Explanation

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar

Uyirin Thalaippirindha Oon

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.