கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் — கற்ற செலச்சொல்லு வார். | குறள் எண் - 722

Thirukkural Verse 722

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

கலைஞர் உரை

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்

மு. வரதராசன் உரை

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை

தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.

Katraarul Katraar Enappatuvar Katraarmun

Katra Selachchollu Vaar

Couplet

Who what they've learned, in penetrating words heve learned to say,Before the learn'd among the learn'd most learn'd are they

Translation

Among scholars he is scholar Who holds scholars with learned lore

Explanation

Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned

Comments (3)

Adira Badal
Adira Badal
adira badal verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Reyansh Sibal
Reyansh Sibal
reyansh sibal verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Rania Edwin
Rania Edwin
rania edwin verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap

Pasaiyinal Paiya Nakum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.