என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. | குறள் எண் - 652

endrum-oruvudhal-ventum-pukazhotu-nandri-payavaa-vinai-652

77

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

"புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்"

கலைஞர் உரை

"புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்."

மு. வரதராசன் உரை

"இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை. என்று மென்றது செயலற்ற காலமுமென்றது. "

மணி குடவர் உரை

Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai

Couplet

From action evermore thyself restrainOf glory and of good that yields no gain

Translation

Eschew always acts that do not Bring good nor glory on their part

Explanation

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)

77

Write Your Comment