அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் — பெருமை முயற்சி தரும். | குறள் எண் - 611

Thirukkural Verse 611

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

கலைஞர் உரை

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்

மு. வரதராசன் உரை

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,

சாலமன் பாப்பையா உரை

நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

Arumai Utaiththendru Asaavaamai Ventum

Perumai Muyarsi Tharum

Couplet

Say not, 'Tis hard', in weak, desponding hour,For strenuous effort gives prevailing power

Translation

Feel not frustrate saying This hard Who tries attains striving's reward

Explanation

Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

Endrum Oruvudhal Ventum Pukazhotu

Nandri Payavaa Vinai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.