கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் — கொள்ளார் அறிவுடை யார். | குறள் எண் - 404

Thirukkural Verse 404

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

கலைஞர் உரை

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

மு. வரதராசன் உரை

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத்தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.

Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum

Kollaar Arivutai Yaar

Couplet

From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show

Translation

The unread's wit though excellent Is not valued by the savant

Explanation

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

Comments (2)

Jivin Tella
Jivin Tella
jivin tella verified

4 weeks ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

Lagan Rau
Lagan Rau
lagan rau verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீரது அரண்.

Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar

Nilaikkelidhaam Neeradhu Aran

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.