நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. | குறள் எண் - 419

nunangiya-kelviya-rallaar-vanangiya-vaayina-raadhal-aridhu-419

24

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

"தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது"

கலைஞர் உரை

"நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது."

மு. வரதராசன் உரை

"நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது. "

மணி குடவர் உரை

Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu

Couplet

'Tis hard for mouth to utter gentle, modest word,When ears discourse of lore refined have never heard

Translation

A modest mouth is hard for those Who care little to counsels wise

Explanation

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction

24

Write Your Comment