இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. | குறள் எண் - 545

iyalpulik-kolochchum-mannavan-naatta-peyalum-vilaiyulum-thokku-545

24

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

"நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்"

கலைஞர் உரை

"நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்."

மு. வரதராசன் உரை

"அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு. இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது. "

மணி குடவர் உரை

Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku

Couplet

Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields

Translation

Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand

Explanation

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice

24

Write Your Comment