ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் — கூன்கையர் அல்லா தவர்க்கு. | குறள் எண் - 1077

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
கலைஞர் உரை
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்
மு. வரதராசன் உரை
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர். ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.
Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum
Koonkaiyar Allaa Thavarkku
Couplet
From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break
Translation
The base their damp hand will not shake But for fists clenched their jaws to break
Explanation
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists
Comments (4)

Lagan Sanghvi
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Kimaya Verma
4 weeks ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Keya Dave
4 weeks ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
Aalvinaiyum Aandra Arivum Enairantin
Neelvinaiyaal Neelum Kuti
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Ryan Trivedi
4 weeks ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.