இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. | குறள் எண் - 1041

inmaiyin-innaadhadhu-yaadhenin-inmaiyin-inmaiye-innaa-thadhu-1041

29

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

"வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை"

கலைஞர் உரை

"வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்."

மு. வரதராசன் உரை

"இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது. "

மணி குடவர் உரை

Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu

Couplet

You ask what sharper pain than poverty is known;Nothing pains more than poverty, save poverty alone

Translation

What gives more pain than scarcity? No pain pinches like poverty

Explanation

There is nothing that afflicts (one) like poverty

29

Write Your Comment