z

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். | குறள் எண் - 989

oozhi-peyarinum-thaampeyaraar-saandraanmaikku-aazhi-enappatu-vaar-989

117

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

கலைஞர் உரை

"தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்"

மு. வரதராசன் உரை

"சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்."

சாலமன் பாப்பையா உரை

"சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: சால்புடைமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்படுவார், ஏனைக் கடலுங் கரையுள் நில்லாமற் காலந் திரிந்தாலும் தாம்திரியார். "

Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku
Aazhi Enappatu Vaar

Couplet

Call them of perfect virtue's sea the shore,Who, though the fates should fail, fail not for evermore

Translation

Aeons may change but not the seer Who is a sea of virtue pure

Explanation

Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change

117

Write Your Comment