கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை — நீட்டி அளப்பதோர் கோல். | குறள் எண் - 796

Thirukkural Verse 796

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

கலைஞர் உரை

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது

மு. வரதராசன் உரை

கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.

சாலமன் பாப்பையா உரை

எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால். மேல் கெடுங்காலைக் கைவிடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமாறென்னை யென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.

Kettinum Untor Urudhi Kilaignarai

Neetti Alappadhor Kol

Couplet

Ruin itself one blessing lends:'Tis staff that measures out one's friends

Translation

Is there a test like misfortune A rod to measure out kinsmen?

Explanation

Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations

Comments (6)

Manjari Kamdar
Manjari Kamdar
manjari kamdar verified

4 weeks ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

Kartik Bose
Kartik Bose
kartik bose verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Jhanvi Apte
Jhanvi Apte
jhanvi apte verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Farhan Mall
Farhan Mall
farhan mall verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Darshit Bhatt
Darshit Bhatt
darshit bhatt verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Rati Sibal
Rati Sibal
rati sibal verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin

Pakaiyum Ulavo Pira

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.