தேறினும் தேறா விடினும் அழிவின்கண் — தேறான் பகாஅன் விடல். | குறள் எண் - 876

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
கலைஞர் உரை
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்
மு. வரதராசன் உரை
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தௌ¤ந்தானாயினும் தௌ¤ந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தௌ¤ந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தௌ¤ந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
Thera�num Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital
Couplet
Whether you trust or not, in time of sore distress,Questions of diff'rence or agreement cease to press
Translation
Trust or distrust; during distress Keep aloof; don't mix with foes
Explanation
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)
Comments (2)

Tushar Srinivasan
4 weeks ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar
Nilaikkelidhaam Neeradhu Aran
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Piya Shetty
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.