ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் — பேதையின் பேதையார் இல். | குறள் எண் - 834

Thirukkural Verse 834

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

கலைஞர் உரை

படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது

மு. வரதராசன் உரை

நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.

Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap

Pedhaiyin Pedhaiyaar Il

Couplet

The sacred law he reads and learns, to other men expounds,-Himself obeys not; where can greater fool be found

Translation

No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns

Explanation

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching

Comments (4)

Tara Bhavsar
Tara Bhavsar
tara bhavsar verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Veer Grover
Veer Grover
veer grover verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Badal Rattan
Badal Rattan
badal rattan verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Kimaya Verma
Kimaya Verma
kimaya verma verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

Kaatchik Keliyan Katunjollan Allanel

Meekkoorum Mannan Nilam

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.