பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து — அல்லல் உழப்பிக்கும் சூது. | குறள் எண் - 938

Thirukkural Verse 938

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது.

கலைஞர் உரை

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது

மு. வரதராசன் உரை

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை

சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.

Porul Ketuththup Poimer Koleei

Arulketuththu Allal Uzhappikkum Soodhu

Couplet

Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives awayAll grace, and leaves the man to utter misery a prey

Translation

Game ruins wealth and spoils grace Leads to lies and wretched woes

Explanation

Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)

Comments (3)

Tiya Goel
Tiya Goel
tiya goel verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Trisha Venkatesh
Trisha Venkatesh
trisha venkatesh verified

4 weeks ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

Priyansh Mannan
Priyansh Mannan
priyansh mannan verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra

Sorkaaththuch Chorvilaal Pen

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.