உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் — செறினும் சீர்குன்றல் இலர். | குறள் எண் - 778

Thirukkural Verse 778

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.

கலைஞர் உரை

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்

மு. வரதராசன் உரை

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.

Urinuyir Anjaa Maravar Iraivan

Serinum Seerkundral Ilar

Couplet

Fearless they rush where'er 'the tide of battle rolls';The king's reproof damps not the ardour of their eager souls

Translation

The king may chide, they pursue strife; They fear loss of glory; not life

Explanation

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)

Comments (3)

Vedika Srinivas
Vedika Srinivas
vedika srinivas verified

4 weeks ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

Rati Sibal
Rati Sibal
rati sibal verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Taimur Kaur
Taimur Kaur
taimur kaur verified

4 weeks ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar

Avaiyakaththu Anjaa Thavar

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.