மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் — எனநான்கே ஏமம் படைக்கு. | குறள் எண் - 766

Thirukkural Verse 766

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.

கலைஞர் உரை

வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்

மு. வரதராசன் உரை

வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

சாலமன் பாப்பையா உரை

வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தௌ¤வுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம். நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.

Maramaanam Maanta Vazhichchelavu Thetram

Enanaanke Emam Pataikku

Couplet

Valour with honour, sure advance in glory's path, with confidence;To warlike host these four are sure defence

Translation

Manly army has merits four:- Stately-march, faith, honour, valour

Explanation

Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army

Comments (5)

Tara Bhavsar
Tara Bhavsar
tara bhavsar verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Adira Badal
Adira Badal
adira badal verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Anvi Warrior
Anvi Warrior
anvi warrior verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Tarini Rege
Tarini Rege
tarini rege verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Manjari Jayaraman
Manjari Jayaraman
manjari jayaraman verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum

Thunaivaliyum Thookkich Cheyal

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.