திருக்குறள் 202: தீயவை தீய பயத்தலால் தீயவை — தீயினும் அஞ்சப் படும்.
திருக்குறள் 202 — தீவினையச்சம் (Dread of Evil Deeds), அறத்துப்பால்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
கலைஞர் உரை
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
மு. வரதராசன் உரை
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
சாலமன் பாப்பையா உரை
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum
Couplet
Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe
Translation
Since evil begets evil dire Fear ye evil more than fire
Explanation
Because evil produces evil, therefore should evil be feared more than fire
Comments (2)
Tanya Bobal
1 year ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
Onporul Kaazhppa Iyatriyaarkku Enporul
Enai Irantum Orungu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Ira Cherian
1 year ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.