செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். | குறள் எண் - 313

seyyaamal-setraarkkum-innaadha-seydhapin-uyyaa-vizhuman-tharum-313

31

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

"யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்"

கலைஞர் உரை

"தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்."

மு. வரதராசன் உரை

"நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும். "

வி முனுசாமி உரை

Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum

Couplet

Though unprovoked thy soul malicious foes should sting,Retaliation wrought inevitable woes will bring

Translation

Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat

Explanation

In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow

31

Write Your Comment