திருக்குறள் 426: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு — அவ்வ துறைவ தறிவு.

Thirukkural Verse 426

திருக்குறள் 426 — அறிவுடைமை (The Possession of Knowledge), பொருட்பால்.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.

கலைஞர் உரை

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

மு. வரதராசன் உரை

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

Evva Thuraivadhu Ulakam Ulakaththotu

Avva Thuraiva Tharivu

Couplet

As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well

Translation

As moves the world so move the wise In tune with changing times and ways

Explanation

To live as the world lives, is wisdom

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Uyir Utampin Neekkiyaar Enpa

Seyir Utampin Sellaaththee Vaazhkkai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.