அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் — இழுக்கா இயன்றது அறம். | குறள் எண் - 35

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
கலைஞர் உரை
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்
மு. வரதராசன் உரை
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பொறாமையும், பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நங்கும் விளக்கப்பட்டு நடைபெறுவதே அறமாகும்.
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram
Couplet
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,Lust, evil speech-these four, man onwards moves in ordered path
Translation
Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech
Explanation
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech
Comments (2)

Onkar Golla
4 weeks ago
Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha
Nanmai Payakkum Enin
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Mannat Sen
4 weeks ago
Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.