மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் — ஆகுல நீர பிற. | குறள் எண் - 34

Thirukkural Verse 34

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

கலைஞர் உரை

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை

மு. வரதராசன் உரை

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆறாம் என்பது அதுவேயாகும். ஆறாம் அவ்வளவே தான்; அதுவல்லாமல் செய்யப்படுவன யாவும் ஆரவாரம் என்னும் தன்மையுடையனவாகும்.

Manaththukkan Maasilan Aadhal Anaiththu

Aran Aakula Neera Pira

Couplet

Spotless be thou in mind! This only merits virtue's name;All else, mere pomp of idle sound, no real worth can claim

Translation

In spotless mind virtue is found And not in show and swelling sound

Explanation

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show

Comments (3)

Chirag Bassi
Chirag Bassi
chirag bassi verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Samiha Contractor
Samiha Contractor
samiha contractor verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Eva Chanda
Eva Chanda
eva chanda verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

Nerunal Ulanoruvan Indrillai Ennum

Perumai Utaiththuiv Vulaku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.