தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். | குறள் எண் - 1150

thaamventin-nalkuvar-kaadhalar-yaamventum-kelavai-etukkumiv-voor-1150

29

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

"யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்"

கலைஞர் உரை

"யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்."

மு. வரதராசன் உரை

"நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார். ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலார்க்கு. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: உடன் போவதற்குக் காரணமாக அலரை இவ்வூர்தானே எடுக்கின்றது. இனிக் காதலர் தாமும் யாம் விரும்பியபடியே செய்வர்: அதனால் இந்த அலர் நமக்கு நன்மையாய் வந்தது. "

வி முனுசாமி உரை

Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor

Couplet

If we desire, who loves will grant what we require;This town sends forth the rumour we desire

Translation

Town raising this cry, I desire Consent is easy from my sire

Explanation

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)

29

Write Your Comment