கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் — பெண்ணின் பெருந்தக்க தில். | குறள் எண் - 1137

Thirukkural Verse 1137

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

கலைஞர் உரை

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

மு. வரதராசன் உரை

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: ('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: கடல்போல மிகுந்து வருகின்ற காமநோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாமல் பொறுத்திருக்கும் பெண் பிறப்புப் போல மிக்க சிறப்புடைய பிறப்பு வேறு எதுவும் இல்லை.

Katalanna Kaamam Uzhandhum Mataleraap

Pennin Perundhakka Thil

Couplet

There's nought of greater worth than woman's long-enduring soul,Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'

Translation

Her sea-like lust seeks not Madal! Serene is woman's self control

Explanation

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust

Comments (4)

Tejas Bath
Tejas Bath
tejas bath verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Parinaaz Khanna
Parinaaz Khanna
parinaaz khanna verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Parinaaz Iyer
Parinaaz Iyer
parinaaz iyer verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Saanvi Garg
Saanvi Garg
saanvi garg verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

Atraal Aravarindhu Unka Aqdhutampu

Petraan Netidhuykkum Aaru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.