நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் — மறையிறந்து மன்று படும். | குறள் எண் - 1138

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
கலைஞர் உரை
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்
மு. வரதராசன் உரை
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
சாலமன் பாப்பையா உரை
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: 'இவர் நிறை குணத்தினால் நாம் செல்வதற்கு அருமையானவர்" என்று அஞ்சுதல் செய்யாமல் அன்பு காட்டத் தக்கவர் என்று இரக்கமும் கொள்ளாமல் மகளிர் காமம் அவர் மறைத்து வைத்திருப்பதையும் கடந்து பலர் அறிய மன்றத்தில் வெளிப்பட்டு விடுகின்றது.
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum
Couplet
In virtue hard to move, yet very tender, too, are we;Love deems not so, would rend the veil, and court publicity
Translation
Lust betrays itself in haste Though women are highly soft and chaste
Explanation
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)
Comments (2)

Umang Doshi
4 weeks ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka�yum Keteen Padhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Jayesh Chandra
4 weeks ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.