நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். | குறள் எண் - 1203

ninaippavar-pondru-ninaiyaarkol-thummal-sinaippadhu-pondru-ketum-1203

34

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

"வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?"

கலைஞர் உரை

"தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?"

மு. வரதராசன் உரை

"எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எனக்குத் தும்மலானது வருவது போலிருந்து வராமல் போகின்றது. அதனால் காதலர் என்னை நினைப்பார்போல இருந்து நினைக்க மாட்டாரோ?. "

வி முனுசாமி உரை

Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum

Couplet

A fit of sneezing threatened, but it passed away;He seemed to think of me, but do his fancies stray

Translation

To sneeze I tried hence but could not Me he tried to think but did not

Explanation

I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

34

Write Your Comment