இறந்த வெகுளியின் தீதே சிறந்த — உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. | குறள் எண் - 531

Thirukkural Verse 531

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

கலைஞர் உரை

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது

மு. வரதராசன் உரை

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.

Irandha Vekuliyin Theedhe Sirandha

Uvakai Makizhchchiyir Sorvu

Couplet

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soulBring self-forgetfulness than if transcendent wrath control

Translation

Worse than wrath in excess is Forgetfulness in joy-excess

Explanation

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy

Comments (2)

Mamooty Wadhwa
Mamooty Wadhwa
mamooty wadhwa verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Indranil Shah
Indranil Shah
indranil shah verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum

Kolkurumpum Illadhu Naatu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.