குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ — குன்றி அனைய செயின். | குறள் எண் - 965

Thirukkural Verse 965

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.

கலைஞர் உரை

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

மு. வரதராசன் உரை

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும'¢ என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.

Kundrin Anaiyaarum Kundruvar Kundruva

Kundri Anaiya Seyin

Couplet

If meanness, slight as 'abrus' grain, by men be wrought,Though like a hill their high estate, they sink to nought

Translation

Even hill-like men will sink to nought With abrus-grain-like small default

Explanation

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing

Comments (4)

Bhavin Rama
Bhavin Rama
bhavin rama verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Biju Sidhu
Biju Sidhu
biju sidhu verified

4 weeks ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

Tara Bahl
Tara Bahl
tara bahl verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Suhana Sathe
Suhana Sathe
suhana sathe verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

Orumai Makalire Polap Perumaiyum

Thannaiththaan Kontozhukin Untu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.