தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. | குறள் எண் - 964

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.
கலைஞர் உரை
"மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்"
மு. வரதராசன் உரை
"மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்."
சாலமன் பாப்பையா உரை
"நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,¢ விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து. "
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar Nilaiyin Izhindhak Katai
Couplet
Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth
Translation
Like hair fallen from head are those Who fall down from their high status
Explanation
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head
Write Your Comment