கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு — ஆற்றாதார் இன்னா செயல். | குறள் எண் - 894

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
கலைஞர் உரை
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்
மு. வரதராசன் உரை
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku
Aatraadhaar Innaa Seyal
Couplet
When powerless man 'gainst men of power will evil deeds essay,Tis beck'ning with the hand for Death to seize them for its prey
Translation
The weak who insult men of might Death with their own hands invite
Explanation
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Mannat Sen
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.