யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் — வேந்து செறப்பட் டவர். | குறள் எண் - 895

Thirukkural Verse 895

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

கலைஞர் உரை

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது

மு. வரதராசன் உரை

மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார். (இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.

Yaantuch Chendru Yaantum Ularaakaar

Vendhuppin Vendhu Serappat Tavar

Couplet

Who dare the fiery wrath of monarchs dread,Where'er they flee, are numbered with the dead

Translation

Where can they go and thrive where Pursued by powerful monarch's ire?

Explanation

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go

Comments (3)

Miraya Dhar
Miraya Dhar
miraya dhar verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Navya Sengupta
Navya Sengupta
navya sengupta verified

4 weeks ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

Elakshi Gara
Elakshi Gara
elakshi gara verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.

Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam

Petraal Thamiyalmooth Thatru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.