திருக்குறள் 166: கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் — உண்பதூஉம் இன்றிக் கெடும்.

Thirukkural Verse 166

திருக்குறள் 166 — அழுக்காறாமை (Not Envying), அறத்துப்பால்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

கலைஞர் உரை

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்

மு. வரதராசன் உரை

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறருக்கு கொடுப்பதை பார்த்துப் பொறாமைப் படுகிறவனுடைய சுற்றம் உடுப்பது உண்பதும் இல்லாமல் கெட்டுவிடும்.

Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum

Unpadhooum Indrik Ketum

Couplet

Who scans good gifts to others given with envious eye,His kin, with none to clothe or feed them, surely die

Translation

Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin

Explanation

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment

Comments (2)

Adira Badal
Adira Badal
adira badal verified

1 year ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

Hiran Bhalla
Hiran Bhalla
hiran bhalla verified

1 year ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.

Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip

Punnalam Paarippaar Thol

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.