துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் — இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | குறள் எண் - 94

Thirukkural Verse 94

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

கலைஞர் உரை

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை

மு. வரதராசன் உரை

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எல்லோரிடத்திலும் இன்பத்தினை உண்டாக்கும் இனிய சொற்களைச் சொல்லுபவர்களுக்குத் துன்பத்தினை மிகுவிக்கும் வறுமை என்பது இல்லை.

Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum

Inpurooum Inso Lavarkku

Couplet

The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found

Translation

Whose loving words delight each one The woe of want from them is gone

Explanation

Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech

Comments (1)

Jivin Tella
Jivin Tella
jivin tella verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

Kaana Muyaleydha Ampinil Yaanai

Pizhaiththavel Endhal Inidhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.