தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு — வேளாண்மை செய்தற் பொருட்டு. | குறள் எண் - 212

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் உரை
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
மு. வரதராசன் உரை
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தகுதியுடைய பெரியவர்களுக்கு, முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் ஒப்புரவு (உதவி) செய்வதற்கேயாகும்.
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku
Velaanmai Seydhar Poruttu
Couplet
The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours
Translation
All the wealth that toils give Is meant to serve those who deserve
Explanation
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence
Comments (2)

Darshit Agrawal
4 weeks ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
Visumpin Thuliveezhin Allaalmar Raange
Pasumpul Thalaikaanpu Aridhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Romil Samra
4 weeks ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.