திருக்குறள் 137: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் — எய்துவர் எய்தாப் பழி.

Thirukkural Verse 137

திருக்குறள் 137 — ஒழுக்கம் உடைமை (The Possession of Decorum), அறத்துப்பால்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

கலைஞர் உரை

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

மு. வரதராசன் உரை

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எல்லோரும் ஒழுக்கத்தினால் மேம்பாட்டினை அடைவார்கள். ஒழுக்கத்திலிருந்து தவறுவதனால் அடைந்து வீடாக கூடாத பழியினை அடைய பெறுவர்.

Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin

Eydhuvar Eydhaap Pazhi

Couplet

'Tis source of dignity when 'true decorum' is preserved;Who break 'decorum's' rules endure e'en censures undeserved

Translation

Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean

Explanation

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.

Kaamam Vituondro Naanvitu Nannenje

Yaano Poreniv Virantu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.