திருக்குறள் 198: அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் — பெரும்பயன் இல்லாத சொல்.

Thirukkural Verse 198

திருக்குறள் 198 — பயனில சொல்லாமை (Against Vain Speaking), அறத்துப்பால்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

கலைஞர் உரை

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்

மு. வரதராசன் உரை

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

சாலமன் பாப்பையா உரை

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

Arumpayan Aayum Arivinaar Sollaar

Perumpayan Illaadha Sol

Couplet

The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance

Translation

The wise who weigh the worth refrain From words that have no grain and brain

Explanation

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

Comments (1)

Yashvi Lata
Yashvi Lata
yashvi lata verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து.

Ilangizhaai Indru Marappinen Tholmel

Kalangazhiyum Kaarikai Neeththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.