திருக்குறள் 195: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில — நீர்மை யுடையார் சொலின்.

Thirukkural Verse 195

திருக்குறள் 195 — பயனில சொல்லாமை (Against Vain Speaking), அறத்துப்பால்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

கலைஞர் உரை

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்

மு. வரதராசன் உரை

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.

Seermai Sirappotu Neengum Payanila

Neermai Yutaiyaar Solin

Couplet

Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense

Translation

Glory and grace will go away When savants silly nonsense say

Explanation

If the good speak vain words their eminence and excellence will leave them

Comments (1)

Abram Ben
Abram Ben
abram ben verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu

Insolan Aakap Perin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.