நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது — அன்றே மறப்பது நன்று. | குறள் எண் - 108

Thirukkural Verse 108

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

கலைஞர் உரை

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

மு. வரதராசன் உரை

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர் செய்த நன்மையினை மறப்பது ஒருவற்கு நல்லதல்லல்; யாரார் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுதல் நல்லதாகும்.

Nandri Marappadhu Nandrandru Nandralladhu

Andre Marappadhu Nandru

Couplet

'Tis never good to let the thought of good things done thee pass away;Of things not good, 'tis good to rid thy memory that very day

Translation

To forget good turns is not good Good it is over wrong not to brood

Explanation

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

Ootuka Manno Oliyizhai Yaamirappa

Neetuka Manno Iraa

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.