அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் — பெண்மை நயவா தவன். | குறள் எண் - 147

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
கலைஞர் உரை
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்
மு. வரதராசன் உரை
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறமாகிய தன்மையுடன் இல்லறத்தில் வாழபவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பில் இருப்பவளது பெண்தன்மையினை விரும்பாதவனே ஆவான்.
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal
Penmai Nayavaa Thavan
Couplet
Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously
Translation
He is the righteous householder His neighbour's wife who covets never
Explanation
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder
Comments (3)

Neysa Grewal
4 weeks ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Anika Dyal
4 weeks ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
Atuththadhu Kaattum Palingupol Nenjam
Katuththadhu Kaattum Mukam
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Armaan Varghese
4 weeks ago
Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.