திருக்குறள் 146: பகைபாவம் அச்சம் பழியென நான்கும் — இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Thirukkural Verse 146

திருக்குறள் 146 — பிறனில் விழையாமை (Not coveting another"s Wife), அறத்துப்பால்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

கலைஞர் உரை

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

மு. வரதராசன் உரை

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பகை, பாவம், அச்சம், பழி ஆகிய இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியினிடத்தே நெறிகடந்து செல்லுபவனைவிட்டு ஒருகாலும் நீங்காவாம்.

Pakaipaavam Achcham Pazhiyena Naankum

Ikavaavaam Illirappaan Kan

Couplet

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four

Translation

Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more

Explanation

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

Thevar Anaiyar Kayavar Avarundhaam

Mevana Seydhozhuka Laan

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.