திருக்குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் — தம்தம் வினையான் வரும்.
திருக்குறள் 63 — மக்கட்பேறு (The Wealth of Children), அறத்துப்பால்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
கலைஞர் உரை
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை
மு. வரதராசன் உரை
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தம் மக்களைத் தம்முடைய பொருள் என்று அறிந்தோர் கூறுவர். மக்களாகிய அப்பொருள் அவரவர்கள் செய்த வினைப்பயனால் உண்டாவதாகும்.
Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum
Couplet
'Man's children are his fortune,' say the wise;From each one's deeds his varied fortunes rise
Translation
Children are one's wealth indeed Their wealth is measured by their deed
Explanation
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Darshit Bava
1 year ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.