திருக்குறள் 102: காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் — ஞாலத்தின் மாணப் பெரிது.

Thirukkural Verse 102

திருக்குறள் 102 — செய்ந்நன்றியறிதல் (Gratitude), அறத்துப்பால்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

கலைஞர் உரை

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்

மு. வரதராசன் உரை

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் காலமறிந்து அறிய காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அக்காலத்தினை நோக்க அது இவ்வுலகத்தினையும் விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.

Kaalaththi Naarseydha Nandri Siridheninum

Gnaalaththin Maanap Peridhu

Couplet

A timely benefit, -though thing of little worth,The gift itself, -in excellence transcends the earth

Translation

A help rendered in hour of need Though small is greater than the world

Explanation

A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world

Comments (1)

Jayesh Chandra
Jayesh Chandra
jayesh chandra verified

1 year ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

Vellath Thanaiya Malarneettam Maandhardham

Ullath Thanaiyadhu Uyarvu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.