z

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. | குறள் எண் - 103

payandhookkaar-seydha-udhavi-nayandhookkin-nanmai-katalin-peridhu-103

145

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

கலைஞர் உரை

"என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது"

மு. வரதராசன் உரை

"இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் ."

சாலமன் பாப்பையா உரை

"இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது. "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தனக்குத் திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் ஒருவன் செய்த உதவியினை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலையும் விடப் பெரிதானதாகும். "

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu

Couplet

Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea

Translation

Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects

Explanation

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea

145

Write Your Comment