திருக்குறள் 209: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் — துன்னற்க தீவினைப் பால்.

Thirukkural Verse 209

திருக்குறள் 209 — தீவினையச்சம் (Dread of Evil Deeds), அறத்துப்பால்.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.

கலைஞர் உரை

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது

மு. வரதராசன் உரை

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் தன்னைத்தானே விரும்புவானானால் சிறிதளவும் பிறனுக்குத் தீச் செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக.

Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum

Thunnarka Theevinaip Paal

Couplet

Beware, if to thyself thyself is dear,Lest thou to aught that ranks as ill draw near

Translation

Let none who loves himself at all Think of evil however small

Explanation

If a man love himself, let him not commit any sin however small

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு

Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum

Marulaanaam Maanaap Pirappu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.