திருக்குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா — மடமை மடவார்கண் உண்டு.

Thirukkural Verse 89

திருக்குறள் 89 — விருந்தோம்பல் (Hospitality), அறத்துப்பால்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

கலைஞர் உரை

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்

மு. வரதராசன் உரை

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பொருள் பெற்றிருந்தும் வறுமை இருப்பது என்பது என்னவென்றால், விருந்தினரைப் போற்றாதிருக்கும் மடமையாகும். அத்தன்மை, அறிவில்லாதவர்களிடத்தில் காணப்படுவதாகும்.

Utaimaiyul Inmai Virundhompal Ompaa

Matamai Matavaarkan Untu

Couplet

To turn from guests is penury, though worldly goods abound;'Tis senseless folly, only with the senseless found

Translation

The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed

Explanation

That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.

Piriththalum Penik Kolalum Pirindhaarp

Poruththalum Valla Thamaichchu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.