திருக்குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் — வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
திருக்குறள் 18 — வான்சிறப்பு (The Blessing of Rain), அறத்துப்பால்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
கலைஞர் உரை
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
மு. வரதராசன் உரை
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
சாலமன் பாப்பையா உரை
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu
Couplet
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore
Translation
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
Explanation
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
Comments (2)
Suhana Sathe
1 year ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
Ootal Unardhal Punardhal Ivaikaamam
Kootiyaar Petra Payan
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Dhanuk Lal
1 year ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.